தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பௌத்த மயமாக்கலை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் திட்டம் இல்லை. இது தொடர்பில் அரசாங்கம் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அடியோடு நிராகரிக்கின்றேன் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் படைத்தரப்பினராலும் தொல்பொருள் திணைக்களத்தினராலும் முன்னெடுக்கப்படும் பௌத்த மயமாக்கல் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார்.
தமிழரின் மத, பண் பாட்டு, கலாசார அடையாளங்களை அழிக்கும் நோக்கம் அரசாங்கத்துக்கு இல்லை. தமிழரின் மத, பண்பாட்டு, கலாசார அடையாளங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் முன்வைத்துள்ள கருத்துக்கள் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சு அதிக கவனம் செலுத்தும் என தெரிவித்துள்ளார்.