வடக்கு மாகாண ஆளுநரால், மூன்று புதிய நியமனங்கள் வழங்கி வைப்பு

0
98

வடக்கு மாகாணத்திற்கான இரண்டு திணைக்களங்களின் ஆணையாளர் பதவிக்கும், மாகாண பிரதிப் பிரதம செயலாளர் பதவிக்கும், ஆளுநரால், நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கான நியமனக் கடிதங்களை, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ், இன்று வழங்கி வைத்தார்.
வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்கள ஆணையாளராக திருமதி சி.சுஜீவாவும்,வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளராக திருமதி கு.காஞ்சனாவும், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக திருமதி அ.யோ.எழிலரசியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு நியமிக்கப்பட்டவர்களுக்கான நியமனக் கடிதங்கள், யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.