வடக்கு மீனவர்களின் பிரச்சனைகளை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் கோரிக்கை

0
229

வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வினை பெற்று கொடுக்க வேண்டும் என தேசிய மீனவத்தில் இயக்கத்தின் இணைப்பாளர் ஜேசுதாசன் தெரிவித்தார் இன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்

தற்பொழுது ராஜபக்ச குடும்பத்தினுடைய நிழல் ஆட்சி இடம்பெறுகிறதா என்ற  கேள்வி மக்கள் மத்தியில் காணப்படுகின்றது

 இளைஞர்கள் போராடி ஒரு மாற்றத்தினை எதிர்பார்த்து செயற்பட்டு கொடுங்கோல் ஆட்சியை மாற்றி பு ஜனாதிபதியினை மாற்றி ஒரு மாற்றத்தினை ஏற்படுத்தி இருக்கின்றார்கள் 

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மஹிந்த ஆட்சியினுடைய நிழல் ஆட்சியினை செய்து கொண்டிருக்கிறார் என்ற கேள்வி காணப்படுகின்றது ஜனநாயகம் தொடர்பில் பேசப்படும் போது போராட்டக்காரர்களை கைது செய்தல் செயற்பாடு தொடர்ந்து இடம்பெறுகின்றது 

அனைவரும் எதிர்பார்த்தார்கள் ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வந்தபோது பொருளாதார ரீதியில் மாற்றம் ஏற்படும் என்று ஆனால் அவ்வாறு இடம் பெறவில்லை ஆனால் மக்கள் மீண்டும் தொடர்ச்சியாக பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் இணையமும் தேசிய மீனவர் ஒத்துழைப்பு  இயக்கமும் இணைந்து குறிப்பாக மீனவர்களை பாதிக்கின்ற பிரச்சனைகள் தொடர்பில் ஊடக வாயிலாக ஆட்சியாளர்களுக்கு தெளிவு படுத்துவதற்காக மீனவ சமூகங்களின் கோரிக்கைகளை முன் வைப்பதற்காக இன்றைய தினம் கலந்துரையாடி இருக்கின்றோம்

 தற்போது அரசியல் நிலைமை மோசமானவையாக காணப்படுகின்றது பொதுமக்கள் எல்லாவிதமாகவும் பாதிக்கப்படுகின்றார்கள் இதிலிருந்து விடுபடுவதற்கு இந்த ஆட்சியாளர்கள் முயற்சிக்க வேண்டும்

 அந்த முயற்சியை கைவிட்டு  போராட்டக்காரர்களை கைது செய்தல்  ஜனநாயக முறைக்கு முரணாக சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தல் போன்ற செயற்பாடுகளை முன்னெடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாது 

இவ்வாறான செயற்பாடுகளை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம் கடந்த 30 வருட காலமாக யுத்தத்தின் காரணமாக மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் அதே சுவடுகளை அதே துன்பங்களை சுமந்தவர்களாக தொடர்ச்சியாக வடக்கு மீனவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் அத்தோடு இந்திய இழுவைமடி பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு இந்த வடக்கு மீனவர்கள் முகம் கொடுக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது எனவே வடக்கு மீனவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இந்த அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்,