வடக்கு மீனவர் பிரச்சினை தொடர்பிலான இருதரப்பு பேச்சுவார்த்தை ஆரம்பம்!

0
21

இலங்கை – இந்திய மீனவர் சங்க தலைவர்களுக்கிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை தற்போது வவுனியாவில் இடம்பெற்று வருகிறது. வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் ஜோசப் பிரான்ஸ்சிஸ் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்று வருகிறது.இந்த கலந்துரையாடலில் இலங்கை இந்திய மீனவர்களுக்கிடையிலான முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டு வருகின்றது.

குறித்த பேச்சுவார்த்தையில் அனைத்து இந்திய விசைப்படகு மீனவ சங்கத்தின் தலைவர் பி.ஜேசுராஜா, இராமேஸ்வரம் பாரம்பரிய விசைப்படகு மீனவ சங்கத்தைச் சேர்ந்த ஆல்வின் பெர்னாண்டோஇ மண்டபம் விசைப்படகு மீனவர் சங்கத்தைச் சேர்ந்த இருதயராஜு ஜஸ்ரின், தங்கச்சிமடம் விசைப்படகு மீனவர் சங்கத்தைச் சேர்ந்த ஜெருசிமான்ஸ், பாம்பன் விசைப்படகு மீனவர் சங்கத்தைச் சேர்ந்த ராஜப்பன் சகாயம் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இலங்கை மீனவர் பிரதிநிதிகள் சார்பாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் ஜோசப் பிரான்ஸ்சிஸ், செயலாளர் முகமட் ஆலம், ஊடகப் பேச்சாளர் அ.அன்னராசா, செயற்குழு உறுப்பினர் வீ.சுப்பிரமணியம், பிரதி செயலாளர் கே.றீட்டாவசந்தி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.