வடமராட்சியில் பொதுமக்களுக்கு முககவசங்கள் வழங்கிவைப்பு!

0
214

வடமராட்சி கிழக்கு லயன்ஸ் கழகத்தினரின் ஏற்பாட்டில் வடமராட்சி, நெல்லியடி லயன்ஸ் கழகம், பளை பொலிசார் மருதங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையுடன் இணைந்து இன்றைய தினம் வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் பொது மக்களுக்கு முகக்கவசம், மற்றும் தொற்று நீக்கும் திரவங்கள் வழங்கும் நிகழ்வு வடமராட்சி கிழக்கு லயன் கழக தலைவர் தலைமையில் கட்டைக்காடு பகுதியில் இடம் பெற்றது

. இதில் கிராம மட்ட அமைப்புக்கள், காவல்துறை, இராணுவத்தினர் பொது மக்களுக்கான முகக்கவசங்களை பிராந்திய தலைவர், நெல்லியடி வட்ட தலைவர், வடமராட்சி கிழக்கு தலைவர்,பளை பொலிஸ் பொறுப்பதிகாரி உட்பட பலரும் கலந்து கொண்டு பொதுமக்களுக்கான முக கவசம் மற்றும் தொற்று நீக்கி திரவத்தினை வழங்கி வைத்தனர்.