யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மாமுனை கடற்பகுதியில், இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இருவர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத கடற்றொழிலான இலை, குழைகளை கடலில் கட்டி கணவாய், மீனை பிடிப்பதற்க்காக இலை குழைகளை படகில் ஏற்றிச்சென்ற இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தாளையடி கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.