வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தில் தீப்பரவல்!

0
85

யாழ்ப்பாணம், வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தில் மின் ஒழுக்கினால் ஏற்பட்ட தீ பரவல், துரித செயற்பாட்டின் மூலம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. பருத்தித்துறையில் அமைந்துள்ள வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தில் நேற்று மாலை பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான வாராந்த கலந்துரையாடல் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற வேளை திடீர் மின் தடை ஏற்பட்டது.
தொடர்ந்து மண்டபத்தின் வெளிப்பகுதியில் மின் இணைப்பு பொருத்தப்பட்ட இடத்தில் தீ பற்றி எரிந்துள்ளது.
இது குறித்து உரிய தரப்பினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அங்கிருந்த உத்தியோகத்தர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டதுடன் அவசர தீயணைப்பு கருவியின் உதவியுடன் தீ பரவல் கட்டுப்படுத்தப்பட்டது.
இதன்மூலம் பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளது.
மின்சார சபை ஊழியர்கள் வருகை தந்து மின் ஒழுக்கின் காரணமாக தீ பற்றி எரிந்து சிதைவடைந்த மின் வயர்களை அகற்றி மின் இணைப்பினை சீர் செய்தனர்.