பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு வடமாகாண பெண்கள் குரல் என்ற அமைப்பு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டதுடன் நிர்வாகமும் தெரிவுசெய்யப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு பின்னர் குறித்த அமைப்பு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இதன் முதல் செயற்பாடாக காணிகளை விடுவிக்கக் கோரி வடமாகாண ஆளுநர் செயலகத்தில் மகஜர் கையளிக்கப்பட்டது.
அத்துடன் அவர்களால் ஊடக சந்திப்பும் நடத்தப்பட்டது.