வட,வடமத்திய,கிழக்கு மாகாணங்களில் மழை பெய்யும்: சுப்பிரமணியம் ரமேஷ்

0
159

தென்மேற்கு வங்காள விரிகுடா கடல்பரப்புகளிலும் , அண்மையாக உள்ள தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல்பரப்புகளிலும் , விருத்தியடைந்துள்ள தாழமுக்கம் , திருகோணமலை கரையில் இருந்து தென்கிழக்காக 220 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளதாகவும் , இது அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு ஆழமான தாழமுக்கமாக வலுவடைந்து வடமேற்கு திசையில் இலங்கையின் கிழக்கு கரையில் அண்மித்ததாக நகர்ந்து அடுத்த 48 மணித்தியாலங்களில் வடதமிழ்நாட்டு கரையை நோக்கி நகர கூடிய சாத்தியம் காணப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட வளிமண்டலவியல் திணைக்கள பொறுப்பதிகாரி சுப்பிரமணியம் ரமேஷ் தெரிவித்துள்ளார் .

இன்றைய வானிலை தொடர்பாக மேலதிக தகவல்களை வழங்குகின்றார் மட்டக்களப்பு மாவட்ட வளிமண்டலவியல் திணைக்கள பொறுப்பதிகாரி சுப்பிரமணியம் ரமேஷ்