யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் வீடு ஒன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் குழு அங்கிருந்த பொருட்களை அடித்து நொருக்கியதுடன், 2 இலட்சத்து 11 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 5 பவுண் நகைகளையும் திருடிச் சென்றுள்ளது.
வட்டுக்கோட்டையில் நேற்று மதியம், வீட்டில் இருந்தவர்கள் வெளியே சென்றிருந்த வேளை மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் சென்ற குழு
கதவை உடைத்து நுழைந்து தையல் இயந்திரம், குளிர்சாதன பெட்டி, ஒலிபெருக்கி சாதனங்கள், தொலைக்காட்சி உள்ளிட்ட பெறுமதி வாய்ந்த பொருட்களை அடித்து நொறுக்கியது.
அத்துடன், வீட்டிலிருந்த 2 இலட்சத்து 11 ஆயிரம் ரூபாய் பணம், 3 பவுண் சங்கிலி, 2 பவுண் காப்புகளையும் திருடிச் சென்றுள்ளது.
இது தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற வந்த பொலிஸார் அயல் வீட்டிலிருந்த சி.சி.ரீ.வி. கமரா பதிவுகளை பார்வையிட்டனர்.
இதன்போது வாள்வெட்டு குழுவில் இருந்த ஒருவர் வீட்டாரிடம் மன்னிப்பு கேட்பதற்காக வந்திருந்தார்.
அப்போது, அவரை அங்கிருந்த பொலிஸார் கைது செய்தனர்.
கைதான நபரிடம் ஏனையவர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.