



வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு புதிய பொறுப்பதிகாரி நியமனம்
வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக டபிள்யூ.டி.பி.டி. கொஸ்தா அவர்கள் இன்றையதினம் நியமிக்கப்பட்டார்.
ஏற்கனவே கடமையாற்றிய பொறுப்பதிகாரி சமன் குணதிலக அவர்கள் 7 ஆண்டுகள் பணியாற்றி, கடந்த 30.07.2022 அன்று இடமாற்றம் பெற்றுச் சென்றதையடுத்து பிரதம பொலிஸ் பரிசோதகர் கொஸ்தா அவர்கள் இவ்வாறு பதவியேற்றார்.
அவர் இன்றையதினம் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றார்.