வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளராகிறார் உமா மகேஸ்வரன்!

0
411

வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளராக அ. உமா மகேஷ்வரன் தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். மத்திய அமைச்சின் இந்து கலாச்சார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய உமாமகேஸ்வரன், கடந்த மாதம் வடமாகாண சபையின் மனித வள முகாமைத்துவ மற்றும் பயிற்சி நெறியின் பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது அவர் கல்வி அமைச்சின் செயலாளராக பதவி மாற்றம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.