வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பி.எஸ்.எம்.சார்ள்ஸை வரவேற்கும் நிகழ்வு, இன்று காலை வவுனியாவில் இடம்பெற்றிருந்தது.
வவுனியா வர்த்தகர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந் நிகழ்வில், வவுனியா நகரசபை வளைவில் இருந்து வாகன பவனியாக அழைத்துவரப்பட்ட ஆளுநர், வவுனியா தெற்கு கல்வி வலயத்தில் வலயக் கல்விப் பணிப்பாளரால் வரவேற்கப்பட்டிருந்தார்.
இதனையடுத்து வவுனியா தனியார் விடுதியில், வர்த்தகர் சங்கத்தின் ஏற்பாட்டில் நிகழ்வு இடம்பெற்றது.
வர்த்தகர் சங்கத்தின் செயலாளர், தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர், முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் உட்பட உறுப்பினர்கள், கந்தசாமி கோவில் நிர்வாகத்தினர், வர்த்தகர் என பலர் கலந்துகொண்டனர்.