வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றியத்தினரின் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று யாழ். மாவட்ட செயலகத்திற்;கு முன்பாக நடைபெற்றது.
தமக்கான வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்வது மாத்திரமன்றி எதிர்கால இளைய தலைமுறைகளும் இதுபோன்ற வேலையற்ற நிலையை எதிர்கொள்ளக் கூடாது என்பதே தமது கவனயீர்ப்பின் பிரதான நோக்கம் என வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றியத்தினர் தெரிவித்தனர்.
அதற்கேற்ற வகையிலான கல்விச் சீர்திருத்தையும் வலியுறுத்தவதாக, வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றியத்தினர் தெரிவித்தனர்.
தமது கோரிக்கை வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர்.
குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் வடமாகாண வேலையில்லாப் பட்டதாரிகள் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.சசிகரன், மன்னார் மாவட்ட வேலையில்லாப் பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ஜெயசீலன் சந்திரகாசன் மற்றும் யாழ்.மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.