தமிழ் மாமன்றத்தின் ஏற்பாட்டில் வன்னிப் பிராந்திய தமிழாராய்ச்சி மகாநாட்டு ஆய்வுத்தொகுதி நூல் வெளியீட்டு விழா வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வானது யாழ் பல்கலைக்கழக வேந்தரும் அனைத்துலக தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் இலங்கைக் கிளையின் தலைவருமான பேராசிரியர் சி. பத்மநாதன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது இந்நூலிற்கான வாழ்த்துரையை வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர் மங்களேஸ்வரன் நிகழ்த்தியதுடன், வெளியீட்டு உரை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி க.இரகுபரனாலும், நூல் அறிமுக உரை வரலாற்று ஆய்வாளர் கலாபூசணம் அருணா செல்லத்துரையாலும் நிகழ்த்தப்பட்டது.
இதன்போது நூலின் முதற்பிரதியினை பூ.பத்மசீலன் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.





