Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711

Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் உழைக்கும் போது செலுத்தும் வரியில் திருத்தங்களை மேற்கொள்ளும் விடயத்தில் தலையிடவுள்ளதாக ‘பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு’ தெரிவித்துள்ளது.அது தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அந்தக் குழு தொழிற்சங்கங்களுக்கு தெரிவித்துள்ளது.வரிப் பிரச்சினையை தீர்ப்பது குறித்து அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் வலியுறுத்தவுள்ளதாகவும் துறைசார் மேற்பார்வைக் குழு தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் உறுதியளித்துள்ளது.வரித்திருத்த நடவடிக்கையின் போது பாதிக்கப்படும் தொழிற்சங்கங்கள் சிலவற்றுடன் கலந்துரையாடுவதற்காக, பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியிருந்தது.
வரிப் பிரச்சினைகள் காரணமாக பல்வேறு துறைசார் நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றமையையும் இந்த கலந்துரையாடலின் போது அந்தக் குழு ஏற்றுக்கொண்டது.இக்கூட்டத்தில் சுமார் 25 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் சுயாதீன கண்காணிப்பாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.