கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தரின் வேண்டுகோளுக்கு இணங்க பிள்ளையாரடி கிழக்கு பல்கலைக்கழக
சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீட மாணவர்களின் நலன் கருதி பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தின் கிளை, மட்டக்களப்பு பிள்ளையாரடி கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீட கட்டட தொகுதியில் இன்று திறந்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் பொது முகாமையாளர் ரஜினிகாந்த் ஏற்பாட்டில், தலைவர் சசிகரன்
தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், கிழக்குமாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருமான எந்திரி என் சிவலிங்கம், கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் வள்ளிபுரம் கனகசிங்கம், பிரதி உபவேந்தர் பேராசிரியர் கருணாகரன், சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடம் பீடாதிபதி சதானந்தன், கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் தங்கவேல், கிழக்கு பல்கலைக்கழக பதிவாளர் பகிரதன், முன்னாள் தலைவர் முத்துலிங்கம் துதிஸ்வரன்,
உப தலைவர் டீ. காந்தன், மட்டக்களப்பு பல நோக்கு கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்கள், சௌக்கிய பராமரிப்பு
விஞ்ஞான பீட பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்