28 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

வறட்சியால் நேர அடிப்படையில் நீர் விநியோகம்

நிலவும் வறட்சியான நிலையை கருத்திற் கொண்டு 69,220 வாடிக்கையாளர்களுக்கு நேர அடிப்படையின்  கீழ் நீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அதன் பிரதிப் பொது முகாமையாளர் அனோஜா களுஆராச்சி குறிப்பிடுகையில், நேர அடிப்படையில்  நீர் விநியோகிக்கப்படும் சந்தர்ப்பங்களில், தேவை அதிகரிக்கும் போது, ​​குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும் என குறிப்பிட்டுள்ளார்.

வறட்சியான நிலை தொடருமானால் தற்போது ஆபத்தில் இல்லாத நீராதாரங்களுக்கும் ஆபத்து ஏற்படலாம் என அனோஜா களுஆராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸை, கோட்டே மற்றும் மஹரகம உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கு 18 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இன்று காலை 08.00 மணி முதல் நாளை அதிகாலை 02.00 மணி வரை இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படும் என அந்த சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், பொரலஸ்கமுவ, கொலன்னாவ, கொட்டிகாவத்தை, முல்லேரியா, இரத்மலானை, கட்டுபெத்த மற்றும் கடுவலை ஆகிய பிரதேசங்களுக்கும் குறித்த காலப்பகுதியில் நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

மின்சார சபையின் உயர் அழுத்த மின் அமைப்பின் பராமரிப்பு பணிகள் காரணமாக அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதால் இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles