வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

0
184

சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன்,
பெரும்பாலன பிரதேசங்களில் இன்று சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடக்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-35 கிலோ மீற்றர் வரை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டைச் சூழவுள்ளகடற் பரப்புகள் சாதாரண அலையுடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.