வவுணதீவு பகுதிகளில் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன

0
426

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா 3ம் அலை தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இதனால் மக்களுக்காக களத்தில் நின்று பணியாற்றும் அரச அதிகாரிகளுக்கு சினோபாம் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இன்றைய தினம் 270 நபர்களுக்கு இத் தடுப்பூசி ஏற்றுவதற்கு தாம் திட்டமிட்டுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்த.னர்

தடுப்பூசி வழங்கும் செயற்பாடு மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது பிதேசத்திலுள்ள பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், இராணுவததினர் மற்றும் மக்களுடன் நேரடி தொடர்புய பிரதேச செயலகத்தில் பணியாற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு முதற்கட்டமாக சினோபாம் தடுப்பூசி ஏற்றப்பட்டது.