வவுனியாவில் இளங்கோவடிகளாரின் நினைவு நாள் அனுஸ்டிப்பு

0
274

தமிழில் தோன்றிய முதல் காப்பியமான சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோவடிகளாரின் நினைவு நாள் வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது.

வவுனியா சின்னப்புதுக்குளம், சிவன் கோவிலுக்கு அருகிலுள்ள இளங்கோவடிகளாரின் திருவுருவச்சிலைக்கருகில் நினைவு நிகழ்வு இன்று இடம்பெற்றது.

இதன்போது இளங்கோ அடிகளின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், சிறப்புரைகளும் இடம்பெற்றன.

வவுனியா நகரசபை செயலாளர் நிமலவேணி நிசங்க தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், தமிழருவி சிவகுமாரன், தமிழ்விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார், பொதுமக்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.