வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலக பிரிவில், வெடிவைத்தகல்லு காட்டுப்பகுதியில் இருந்து சட்டவிரோதமாக உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிச்சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெடுங்கேணி வனவள திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் வனவள திணைக்கள உத்தியோகத்தர்கள் சம்பவ இடத்தை சுற்றிவளைத்து, உழவு இயந்திரத்ததையும், சாரதியையும் கைது செய்தனர்.
இதன்போது ஏனைய நபர்கள் தப்பி சென்றுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
உழவு இயந்திரம் வனவள திணைக்களத்தில் தடுத்துவைக்கப்பட்டதோடு நாளை மறுதினம் வவுனியா நீதவான் நீதீமன்றில் முற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.