வவுனியாவில், தந்தை செல்வாவின் 46வது நினைவு தினம் அனுஸ்டிப்பு

0
162

இலங்கை தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவரான தந்தை செல்வாவின் 46வது நினைவு தினம் இன்று வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில், மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் அமைந்துள்ள அவரது சிலையருகே நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

இதன்போது தந்தை செல்வாவின் சிலைக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டதுடன், மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

தமிழரசுக் கட்சியின் முன்னாள் நகரசபை உறுப்பினர் நா.சேனாதிராசா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.