வவுனியாவில் பிரதான வீதிகளில் சுற்றித் திரிந்த மாடுகள்- நகரசபை வசம்

0
171

வவுனியாவில் கட்டாக்காலி மாடுகளால் வீதி விபத்துக்கள் ஏற்படுகின்றமை இனங்காணப்பட்ட நிலையில், நகர வீதிகளில் காணப்பட்ட கட்டாக்காலி மாடுகளை நகரசபை ஊழியர்கள், பொலிசாருடன் இணைந்து இன்று அதிகாலை பிடித்தனர்.
சுமார் எண்பதிற்கும் மேற்பட்ட கட்டாக்காலி மாடுகள் வவுனியா நகரசபையினால் பிடிக்கப்பட்டுள்ள நிலையில், மாடுகளின் உரிமையாளர்கள் அடையாளங்களை உறுதிப்படுத்தி, தண்டப்பணத்தை செலுத்தி மீளப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உரிய காலத்தில் நகரசபையின் பொறுப்பில் உள்ள மாடுகளை உரிமையாளர்கள் பொறுப்பேற்கத் தவறினால், அவற்றை ஏல விற்பனை செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.