வவுனியாவில், 5 ஆயிரம் ரூபா போலி நாணயத் தாள்கள் புழக்கத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது. ஓமந்தை பகுதியில் உள்ள ஏரிபொருள் நிரப்பு நிலையம், மரக்கறி விற்பனை நிலையம் மற்றும் வீதியோர வியாபாரத்தில் ஈடுபடும் நபர்களிடம், பொருட்களை கொள்வனவு செய்யும் போது, இனந்தெரியாதோரால், போலி நாணயத் தாள்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.