வவுனியாவில், முச்சக்கரவண்டி கட்டணத்தை குறைக்க நடவடிக்கை!

0
194

வவுனியா மாவட்டத்தில், விரைவில், முச்சக்கரவண்டி கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத் தலைவர் இ.ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளாவிய ரீதியில், முச்சக்கரவண்டி கட்டணம் குறைக்கப்பட்டு, மக்களுக்கான சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

எனினும், வவுனியாவில் பல முச்சக்கரவண்டி தரிப்படங்களில், பல்வேறுபட்ட நிலையில், கட்டணம் அறிவிடப்பட்டு வருவதாக, பொது மக்கள் முறையிட்டுள்ளனர்.

இது தொடர்பில், வவுனியா மாவட்ட முச்சக்கரவண்டி சாதிகள் சங்கத் தலைவர் இ.ரவீந்திரனிடம் தொடர்பு கொண்டு வினவிய போது, அவர் பதில் வழங்கியுள்ளார்.

முச்சக்கரவண்டி கட்டணத்தை குறைப்பது தொடர்பில், அனைத்து சாரதிகளுடனும் கலந்துரையாடுவதற்கான கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என, வவுனியா மாவட்ட முச்சக்கரவண்டி சாதிகள் சங்கத் தலைவர் இ.ரவீந்திரன் குறிப்பிட்டுள்ளார்.