வவுனியாவில், வறுமையில் வாழும் குடும்பத்திற்கு, இராணுவத்தினால், புதிய வீடு கையளிப்பு

0
130

வவுனியா இராசேந்திரகுளம் கிராம சேவையாளர் பிரிவில், வறுமையில் வாழும் குடும்பத்திற்கு, இராணுவத்தினால், புதிய வீடு கையளிக்கப்பட்டுள்ளது. மூன்று பிள்ளைகளுடன் வறுமையில் வாழும் குடும்பத்திற்கு, வீடற்ற அனைவருக்கும் வீடு கட்டிக்கொடுக்கும் திட்டத்தின் கீழ், வீடு அமைத்து வழங்கப்பட்டுள்ளது. சுமார் 35 இலட்சம் ரூபா, தனியார் நன்கொடை நிதி மூலமும், இராணுவத்தின் மனித உழைப்பின் மூலமும், வீடு அமைக்கப்பட்டுள்ளதுடன், புதிய வீட்டின் பெறுமதி, 50 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில், வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சி.டி.ரணசிங்க மற்றும் ஏனைய அதிகாரிகள், வவுனியா பிரதேச செயலக அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.