வவுனியாவில் வீசிய பலத்த காற்றால் தோட்டங்கள் அழிவு

0
125

வவுனியாவில் நேற்று மழையுடன் கூடிய பலத்த காற்றினால் நெடுங்கேணி பகுதி விவசாயிகளின் பப்பாசி தோட்டங்கள் முழுமையாக அழிவடைந்துள்ளன.

வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் நேற்று பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்த நிலையில் பல பிரதேசங்களில் சேதங்கள் ஏற்பட்டிருந்தன.

குறிப்பாக நெடுங்கேணி பகுதியில் விவசாயிகளின் தோட்டத்திலிருந்த 1700 ற்கும் மேற்பட்ட பப்பாசி மரங்கள் முற்றாக அழிவடைந்துள்ளன.

இதனால் பல இலட்சம் ரூபாய் அளவில் நட்டம் ஏற்பட்டுள்ளதுடன், தமது வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.