வவுனியாவில் 7 பேருக்கு டெங்கு தொற்று

0
129

வவுனியாவில் 7 பேருக்கு டெங்கு தொற்று இனங்காணப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர். வவுனியா கந்தசாமி கோவில் வீதி மற்றும் நகர உள்வட்ட வீதி, உக்குளாங்குளம், நொச்சிமோட்டை, கணேசபுரம், மறவன்குளம் ஆகிய பகுதிகளை சேர்ந்தோர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுன்னனர்.
தற்போது அவ்வப்போது மழை பெய்து வருவதால் டெங்கு நுளம்புளின் பெருக்கம் அதிகரித்து டெங்கு தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே அனைவரும் சமூகப் பொறுப்புடன் தமது வாழிடங்களையும், அயல் பகுதியையும் சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் டெங்கு தொற்றில் இருந்து பாதுகாப்பு பெற முடியும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.