வவுனியா அல் இக்பால் மகா வித்தியாலயத்தில் புதிய அதிபருக்கு வரவேற்பு

0
106

வவுனியா அல் இக்பால் மகா வித்தியாலய புதிய அதிபருக்கான வரவேற்பு நிகழ்வு ஒன்று இன்று இடம்பெற்றது.
பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் பாடசாலை பிரதான மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது புதிய அதிபர் எம்.எம்.அன்பஸ் மற்றும் அதிதிகள் மாலை அணிவிக்கப்பட்டு பாண்ட் வாத்தியத்துடன் வரவழைக்கப்பட்டு மண்டபத்தில் வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது. இதில், செட்டிகுளம் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.செல்வரத்தினம், வவுனியா தெற்கு வலய இஸ்லாமிய பாட ஆசிரிய ஆலோசகர் ஜெமீல், பள்ளித் தலைவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.