வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கருணாரத்தின பண்டார என்ற 56 வயதான கைதி ஒருவர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் போதைப்பொருள் தொடர்பான வழக்கில் கைதுசெய்யப்பட்டு, வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவருக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டதையடுத்து அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.