வவுனியா பொலிஸ் வளாகத்தில் அதிகாரிகள் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வவுனியா தலைமையக பொலிஸில் பணிபுரியும் மூன்று அதிகாரிகளுக்கும் மற்றும் வவுனியா பயங்கரவாத விசாரணைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவருக்கும் இதற்கு முன்னர் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது என வவுனியா பொதுச் சுகாதார பரிசோதகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இவர்களுடன் நெருங்கிப் பழகியவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைக்கு அமைய இந்தப் புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
வவுனியா பயங்கரவாத விசாரணைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 16 பேருக்கு கடந்த 28 ஆம் திகதி கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
பின்னர் வவுனியா பொலிஸ் வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் பொலிஸ் அதிகாரிகளுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.