வெசாக் தினத்தினை முன்னிட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து 15 கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலைசெய்யப்பட்டுள்ளனர்.
சிறு குற்றங்களை புரிந்த மற்றும் தண்டப்பணத்தினை செலுத்த முடியாத 15 பேரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர்.
சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அதிகாரிகள் முன்னிலையில் கைதிகள் விடுதலைசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.