கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சடலத்தை ஹற்றனில் இருந்து ஓட்டமாவடி பகுதிக்கு கொண்டு செல்லும் வாகனத்திற்கான பாதுகாப்பை வழங்கிய பொலிஸ் வாகனம், ஹற்றன்- கினிகத்தேனை பகுதியில் விபத்துக்குள்ளானது.
இன்று காலை (05) நடந்த இந்த விபத்தில் வாகனதில் பயணித்த உப பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அதேவேளை அவருடன் பயணித்த ஏனைய பொலிஸ் அதிகாரிகள் மூவரும் ஏனைய பயணிகள் மூவருமென ஆறுபேர் காயமடைந்த நிலையில் வட்டவளை மருத்துவ மனையில் அனுமதிகக்ப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.