அம்பாறை மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் தலைவரும் சுவாட் அமைப்பின் தலைவருமான வ.பரமசிங்கம் நேற்றிரவு விபத்தில் சிக்கி உயிரிழந்த நிலையில், அவரது இறுதிக் கிரியைகள்
இன்று இடம்பெற்றன.
கடமையின் நிமித்தம் கொழும்பு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தபோது, வெலிக்கந்தை செவனப்பிட்டி பிரதேசத்தில் மரக்கறி ஏற்றி வந்த லொறியுடன் மோதி, இவர் உயிரிழந்திருந்தார்.
உயிரிழந்தவரின் இறுதிச் சடங்குகள் தம்பட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெற்ற நிலையில், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன்
உள்ளிட்டஅரசஉயர் அதிகாரிகள் அரசியல் தலைவர்கள் கல்விமான்கள் சமூகஅமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பெருந்திரளானவர்கள்
பங்கேற்றதுடன் இரங்கல் உரையினையும் ஆற்றினர்.
பூதவுடல் தம்பட்டைபொதுமயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
உயிரிழந்த வ.பரமசிங்கம் சமூகஜோதி செந்தூரராஜாவினால் உருவாக்கப்பட்டசுவாட் அமைப்பின் நீண்டகால உத்தியோகத்தர் என்பது குறிப்பிடத்தக்கது.
Home கிழக்கு செய்திகள் வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்த அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் தலைவரின் இறுதிக்கிரியை