வாகரை ஊரியன் கட்டு பாடசாலையின்
விளையாட்டு மைதானத்தில் சிரமதானப் பண

0
180

கல்குடா கல்வி வலயத்தில் உள்ள வாகரை ஊரியன் கட்டு பாடசாலையின் விளையாட்டு மைதானத்தினை மாணவர்களின் நலன் கருதி பிரதேச இராணுவத்தினர் புனர்தாரனம் செய்யும் நோக்குடன் சிரமதானப் பணியில் ஈடுபட்டனர்.

இப் பாடசாலையின் விளையாட்டு மைதானமானது நீண்டகாலமாக காடு படர்ந்து புற்கள் நிறைந்து காணப்பட்டுள்ளது.இதனால் மாணவர்களின் பாட நேர விளையாட்டுக்கள் மற்றும் ஏனைய விளையாட்டு நிகழ்சிகளைக் கூட நடாத்த முடியாத சூழ் நிலை காணப்பட்டுள்ளது.

இந் நிலையினை கவனத்தில் கொண்டு அதனை நிவர்த்தி செய்யும் முகமாக பாடசாலையின் அதிபர் யோ.மங்களதர்சன் வாகரை பிரதேச 233 ஆவது படைப்பிரிவின் பிரிகேடியர் வசந்த கேவகே அவர்களிடம் விடுத்த வேண்டுகோளினை அடுத்து அவர் தமது இராணுவத்தினரின் உதவியுடன் சிரமதானப் பணியினை முன்னெடுத்து வருவதுடன் பாடசாலையில் உள்ள குறைபாடுகள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டார்.

குறித்த பாடசாலையானது நீண்டகாலமாக மாணவர்களுக்கான பல்வேறுபட்ட அடிப்படை வசதிகளற்ற நிலையில் காணப்பட்டு வருகிறது.புதிதாக நியமனம் பெற்று சென்ற அதிபரான மங்களதர்சன் அவற்றினை நிவர்த்தி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.