வான் மீது பெக்கோ வாகனம் மோதி விபத்து!

0
199

வவுனியா கொரவப்பொத்தான வீதியில் பெக்கோ கனகரக வாகனமும் வான் ஒன்றும் இன்று (02) விபத்துக்குள்ளானது.

திருகோணமலையில் இருந்து கொரவப்பொத்தான வீதி வழியாக யாழ்ப்பாணம் நோக்கி நோயாளி ஒருவரை ஏற்றிவந்த கயஸ்ரக வான்மீது கோவில்குளம் உமா மகேஸ்வரன் வீதியால் வந்த பெக்கோ கனகரக வாகனம் உமா மகேஸ்வரன் சந்தியில் வானுடன் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் கயஸ்ரக வான் கடும் சேதத்திற்குள்ளானதுடன் ஒருவர் சிறு காயத்திற்குள்ளானார்.

விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.