கோடா மற்றும் கசிப்பு தயாரித்த இரு இளைஞர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கிரானைஇ தட்டாவெளி எனும் பகுதியில் 20 மற்றும் 26 வயதுகளுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து 420 லீற்றர் கோடா, 20 லீற்றர் கசிப்பு மற்றும் தயாரிக்கும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட இருவரும் நீதவான் முன்னிலையில் ஆஜபடுத்தப்பட்டதை அடுத்து பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாழைச்சேனை பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.