ஸ்ரீலங்கா ஜனரஜ சுகாதார சேவைகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு வாழைச்சேனை ஆதார வைத்திய சாலை சுகாதார தொழிற் சங்கத்தினரால் பணிபஸ்கரிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றது.
,ன்று காலை 7.00 மணி தொடக்கம் நண்பகல் 1.00 மணி வரை ,வ் பணிபஸ்கரிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றதுடன்
துணை மருத்துவ சேவை உத்தியோகஸ்த்தர்கள், தாதியர், சுகாதார சிற்றூழியர்கள், குடும்நல உத்தியோகஸ்த்தர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பணி பஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.
வைத்தியசாலை வளாகத்தில் ஒன்று கூடியவர்கள் தங்களது கோரிக்கை அடங்கிய வாசக பதாதைகளை கையில் ஏந்தியவாறு அமைதியான முறையில் தங்களது எதிர்ப்பினை அரசிற்கு வெளிப்படுத்தினர்.
எனினும், அவசர சேவைப் பிரிவு,கொரோனா சிகிச்சை நிலைய நடவடிக்கைகளில் எவ்வித தடங்களுமின்றி மருத்துவ சேவைகள் இடம்பெற்றன