வாழ்வாதாரத்திற்கு வளர்த்த ஆடு இறைச்சிக்காக வெட்டப்பட்டது:பொலிஸார் விசாரணை!

0
91

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியை சேர்ந்த பெண் தலைமைத்துவ குடும்பமொன்றின், ஆடு ஒன்றை திருடி இறைச்சிக்காக வெட்டிய சம்பவம் ஒன்று நேற்று கட்டைக்காடு பகுதியில் பதிவாகியுள்ளது.
கணவனை இழந்த குறித்த பெண் தனது இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வரும் நிலையில் வாழ்வாதாரத்திற்காக ஆடுகளை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் மேய்ச்சலுக்காக சென்ற குறித்த பெண்ணிற்கு சொந்தமான ஆடு, இறைச்சியாக்கப்பட்டு கட்டைக்காட்டில் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையிர் சம்பவ இடத்திற்கு சென்ற மருதங்கேணி பொலிஸார் ஆட்டை இறைச்சிக்காக வெட்டிய இடத்தை கண்டு பிடித்ததோடு சந்தேக நபர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.