28 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

விசாரணைக்கு பெண் எம்.பிக்களின் உதவி கோரப்படுகிறது

அண்மையில் பாராளுமன்றத்தில் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா ஆகியோருக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு தொடர்பில் விசாரணை நடாத்த சபாநாயகரால் நியமிக்கப்பட்ட குழுவானது, சம்பவம் தொடர்பில் ஆராய பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் உதவியை நாடவுள்ளது.

அதன்படி பாராளுமன்ற உறுப்பினர்களான தலதா அத்துகோரல மற்றும் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே ஆகியோரின் உதவியை நாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குழுவானது இரு பெண் எம்.பிக்களின் உதவியை மாத்திரமே பெறவுள்ளது. அதற்கு அப்பால் அவர்கள் குழுவில் இணைத்துக்கொள்ளப்பட மாட்டார்கள் என விடயம் குறித்து கருத்து வெளியிட்ட குழுவின் உறுப்பினர் கயந்த குணதிலக்க தெரிவித்தார்.

குறித்த குழு எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி கூடவுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தன்னை  பாராளுமன்ற வளாகத்திற்குள் வைத்து தாக்கியதாக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே சபாநாயகரிடம் கடந்த ஒக்டோபர் 22 ஆம் திகதி முறைப்பாடு அளித்ததையடுத்து, துணை சபாநாயகர் அஜித் ராஜபக்ச தலைமையில் சம்பவம் குறித்து விசாரணை நடாத்த குறித்த குழுவை நியமித்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles