விடுதலைப் புலிகளிடமிருந்த மீட்கப்பட்ட தங்க ஆபரணங்களை சோதனைக்குட்படுத்தி அறிக்கைப்படுத்துமாறு உத்தரவு!

0
8

வடக்கு , கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்கப்பட்டு, புலனாய்வு பணிப்பாளர் சபையில் வைக்கப்பட்டுள்ள தங்க ஆபரணங்கள் எனக் கருதப்படுவனவற்றை, தேசிய இரத்தினக்கல் ஆபரண அதிகார சபைக்கு அனுப்பிச் சோதித்து அறிக்கைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் சார்பாக விடுக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த பின்னர் கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.