தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடக இணைப்பாளர் தயா மாஸ்டர் எனப்படும் வேலாயுதம் தயாநிதிக்கு எதிராக பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது
தமிழீழ விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்களுக்கு ஒத்துழைத்தார் என முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டினை மன்றில் தயாமாஸ்ரர் ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் தயா மாஸ்டருக்கு ஐந்து வருடத்திற்கு ஒத்திவைத்த இரண்டு வருட சிறைத்தண்டனை வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளார். வேலாயுதம் தயாநிதி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான எம் ஏ சுமந்திரன்ஆஜராகினார்.