கெப் வாகனமும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.
வெல்லவாய – தனமல்வில வீதியின் நுகயாய பகுதியில் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த 44 வயதான பொலிஸ் கான்ஸ்டபிள், 42 வயதான அவரின் மனைவி மற்றும் 70 வயதான தந்தை ஆகியோரோ உயிரிழந்துள்ளனர்.
இதன்போது காயமடைந்த சிறுவனொருவன் மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கெப் சாரதி மது போதையில் இருந்துள்ளதுடன், அவரிடம் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கெப் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், வெல்லவாய பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.