விபத்துக்குள்ளான பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு!

0
262

கொழும்பு குருந்துவத்தை சுற்று வட்டத்திற்கு அருகில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
வலஸ்முல்ல பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் கடமையில் ஈடுபட்டிருந்த போது விபத்துக்குள்ளானார்.
விபத்து தொடர்பில் காரை ஓட்டி வந்த தனியார் நிறுவனம் ஒன்றில் பொறியியளாளராக பணிபுரியும் நாரஹேன்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.