இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவுக்கும், பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
களுவாஞ்சிக்குடியிலுள்ள இரா.சாணக்கியனின் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் ஊடகங்களில் வெளிவரும் உண்மைக்குப் புறம்பான, மக்களைக் குழப்பி திசை திருப்பும் விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளன என இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.
மாவை சேனாதிராசாவுக்கும், இரா.சாணக்கியனுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் காணப்படுவதாகவும், இதன்காரணமாக சாணக்கியன் மீது மாவை கோபத்தில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையிலேயே சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, குறித்த சந்திப்பின்போது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் செயலாளர் ப. சத்தியலிங்கமும் உடனிருந்தார்.