விமானப்படையின் 73வது வருட நிறைவு : யாழில் விமானப்படையின் சாகசங்கள்!

0
125

இலங்கை விமானப்படையின் 73வது வருட நிறைவை முன்னிட்டு ‘வான் சாகசம் – 2024’ கண்காட்சி நிகழ்வுகள் யாழ் முற்றவெளி மைதானத்தில் இன்று ஐந்தாவது நாளாக இடம்பெற்றுவருகிறது.

‘நட்பின் சிறகுகள்’ எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் கடந்த 06ம் திகதி ஆரம்பமாகிய கண்காட்சி இன்று இரவு 11 மணிரை இடம்பெறவுள்ளது.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, இன்றைய தினம்,
கலந்துகொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

நிகழ்வில் விமானப் படையினரின் பல்வேறு சாகச நிகழ்வுகள் இன்றும் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.