விமானப்படை விமானம் அவசரமாக தரையிறக்கம்

0
421

இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான விமானமொன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திருகோணமலையில் அவசரமாக தரையிறங்கியது.

இலங்கை விமானப்படையின் விமானிகளின் அடிப்படை பயிற்சிக்கு பயன்படுத்தப்பட்ட செஸ்னா 150 என்ற விமானமே இவ்வாறு தரையிறங்கியது.

இந்த விமானம் திருகோணமலையின் நிலாவெளி கடற்கரைக்கு அருகிலுள்ள கோபாலபுரம் பகுதியில் அவசரமாக தரையிறங்கியதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தில் எந்தவிதமான உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என்பதுடன், இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.