விவசாயத்துறையை வளப்படுத்த ஐக்கிய அரபு இராச்சியம் உதவி

0
238

நாட்டின் விவசாயத்துறையை வளப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என ஐக்கிய அரபு இராச்சியம் தெரிவித்துள்ளது.

விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவை சந்தித்த, ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் கலீட் அல் அமீர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கை கோப்பி செய்கையை விஸ்தரிப்பதற்கான ஒத்துழைப்பும் வழங்கப்படும் எனவும், நாட்டின் கோப்பிக்கு சிறந்த கேள்வி நிலவுவதாகவும் ஐக்கிய அரபு ராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் தெரிவித்துள்ளார்.