உரிய கால அட்டவணைக்கு அமைய பயிர்ச்செய்கையை மேற்கொள்ளாத விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கப்படமாட்டாதென விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இதற்கமைய, பெரும்போகத்தில் உரிய கால அட்டவணைக்கு அமைய பயிர்ச்செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அவ்வாறு மேற்கொள்ளப்படாத பட்சத்தில், எதிர்வரும் சிறுபோகத்திலும் நீர்ப்பற்றாக்குறைக்கு முகங்கொடுக்க நேரிடும் என அவர் கூறினார்.
இந்த போகத்தில் நீரை மிச்சப்படுத்திக்கொள்ளாவிட்டால், எதிர்வரும் போகத்தில் சிக்கலை எதிர்நோக்க வேண்டியேற்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.